மலையகத்தின் புதிய பொருளாதார திட்டங்களை ஏற்படுத்துவதன் மூலமே சமூக மாற்றம் ஏற்படும். அக்கரபத்தனை பகுதியில் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.
மலையகத்தின் இன்று இளைஞர் யுதிகள் வேலை இன்றியே அவதிப்படுகின்றனர். கடந்த நாலரை ஆண்டுகளில் 1000 ரூபா பற்றி பேசிப்பேசியே காலத்தினை வீணடித்தார்கள். இன்று மலையகத்தில் அதற்கு அப்பால் எவ்வளவோ பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே புதிய சுயதொழில்களை உருவாக்கக்கூடிய ஹோட்டல் முகாமைத்துவ பலகலைக்கழகங்கள், கைதொழில் பயிற்சிக்கல்லூரிகள் உருவாக்கப்படும். மலையகத்தின் புதிய பொருளாதார திட்டங்களை உருவாக்குவது மூலமே சமூக மாற்றம் ஏற்படும் என பொது பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அக்கரபத்தனை பகுதியில் இன்று (23) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்; அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் இன்று பல குறைபாடுகள் உள்ளன. பல வைத்தியசாலைகளில் வசதிகள் இன்றியே உள்ளன. வைத்தியர்கள் இல்லை அடிப்படை வசதிகள் இல்லை இளைஞர்களுக்கு தங்கள் படிப்புக்கேற்ற வேலை வாய்ப்புக்கள் இல்லை. அப்படியே படிப்பு இருந்தாலும் அரசியல் தலைவர்களின் சிபாரிசு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதுவுமில்லை. வீட்டுரிமை பெற்றுக்கொடுத்து விட்டோம் காணியுரிமை உள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் காணி உரிமையினை காட்ட சொல்லுங்கள் அப்படி ஒரு உரிமையில்லை. கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் 1000 ரூபா சம்பள பிரச்சினைக்கு போராடியது போல் காணி உரிமைக்கு போராடி இருந்தால் அது நிச்சயம் கிடைத்திருக்கும். நாங்கள் இன்று பலமான ஒரு கட்சியுடன் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது அந்த அரசாங்கத்தின் பங்தாரராக மாற வேண்டும் அப்போது எமக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம். இப்போது இருக்கும் ஜனாதிபதி அவர்கள் ஆயிரம் வாக்குகளாலோ, ஐந்து லட்சம் வாக்குகலாளோ வெற்றிப்பெறவில்லை 15 லட்சம் வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.

அந்த வெற்றியில் நாம் பங்கெடுக்காததன் காரணமாக இன்று எமது தேவைகள் கேட்க முடியாமல் உள்ளது. அந்த நிலை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் உருவாகக்கூடாது. ஜனாதிபதியுடன் நாம் இன்று பேச கூடிய நிலை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி ஹட்டன் வந்த போது நான் எங்களது இளைஞர்கள் யுவதிகள் படித்து விட்டு வேலையின் உள்ளார்கள் என்று தெரிவித்தேன் அப்போது அதற்கு என்ன செய்யலாம் என்று அவர் கேட்டார் அதற்கு நான் இங்கு சுயதொழில் பேட்டைகள் உருவாக்க வேண்டும், சுற்றுலா துறையினை விருத்தி செய்ய வேண்டும் விவசாயதுறையினை மேம்படுத்த வேண்டும் கணணி வள நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக நுவரெலியா மவாட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும் இன்று கண்டியும் மலையகம் தான் பதுளையும் மலையகம் தான் ஆனால் அங்கெல்லாம் கணணி வளநிலையம் உள்ளது, கோல் சென்டர் உள்ளது பயிற்சிக்கல்லூரிகள் உள்ளன.அந்த இடமே நவீனமாகியுள்ளன. அப்படி என்றால் ஏன் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் கொண்டுவரப்படவில்லை. ஏனென்றால் நிறைய பேருக்கு தோட்டத்தொழில் தவிர வேறு எந்த தொழிலும் தெரியக்கூடாது. ஆகவே இந்த மாவட்டத்தில் அவ்வாறான நிலையங்கள் உருவாக்க முயற்சி செய்யவில்லை.கொரோனோ காரணமாக நாட்டின் பொருளாதாரம் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது அப்படி இருக்கும் போது போனா போவுது என்று இருக்க முடியாது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்தால் எம்மை இந்த நாடு திரும்பி பார்க்கும். ஒரு காலத்தில் தேயிலை தோட்டத்தில் வரும் வருமானத்தின் மூலம் இந்த நாடு நிமிர்ந்து நின்றது அதனால் சில சலுகைகளை செய்து கொடுத்தாரகள் ஆனால் இன்று அப்படியல்ல. ஆகவே தேயிலை துறையினை மாத்திரம் நம்பியிருக்க முடியாது. மாற்று துறைகளை உருவாக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
