புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
இறுதியாக நேற்றிரவு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள தனிமைப்படுத்தப்படும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளில் மேலும் 15 தொற்றாளர்கள் இனங்காம் காணப்பட்டுள்ளனர்
இவர்களின் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோர் 14 பேரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புடைய ஒருவரும் ஆவார் .
இந்த 14 பேரும் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2745 உயர்ந்துள்ளது. இவர்களில் 670 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை உள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

