இன்று புதிதாக இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர் பற்றிய விபரம்
இலங்கையில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் தொற்றாளருடன் பழகிய ஒருவரே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில்நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2731 ஆக அதிகரித்துள்ளது.

