இந்தியாவில் மிக வேகமாக உயர்ந்து செல்லும் கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
இந்தியாவில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து செல்கின்றது. நாடு முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்ருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக தொற்று காணப்படும் மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்தையும் தமிழகம் டெல்லி அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 28 ஆயிரத்து 732 ஆக உள்ளது.
இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய பங்குதாரர் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், நவம்பர் மாதத்திற்கு முன்பாக கண்டுபிடிக்க போகும் தடுப்புமருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்,’ என்று கூறியுள்ளது கவலைக்குரிய விடயம்.

