http://ceylononline.lk/

Ceylon Online News Portal

திடீரென்று தூதரக நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீனாவிற்கு உத்தரவிட்டுள்ள அமெரிக்கா

டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள  சீனாவின் துணை தூதரகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், நிகழ்ச்சிகளையும் உடனடியாக நிறுத்துமாறு  அமெரிக்கா திடீரென உத்தரவிட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை ஹூஸ்டனில் உள்ள காவல்துறையினர் மிட் டவுன் நகரின் மான்ட்ரோஸ் பவுல்வர்டில் (Montrose Boulevard) தூதரக அலுவலக வளாகத்திற்குள் ஆவணங்கள் சில அழிக்கப்படுவதாக  வந்த தகவலை  அடுத்து அதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணங்களை எரிக்கும் புகைமூட்டம் உள்ளதாகவும் அத்துடன் அவற்றுடன் அதிகாரிகள் இருப்பதாகவும் உறுதி செய்தனர்.

இவைகள் அடங்கிய காணொளியையும் உள்ளூர் ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்தே வெள்ளை மாளிகையில் இருந்து இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதற்கு கடும் ஆட்சேபனை செய்த சீன அரசாங்கம் தனது வெளியுறவுத் துறை மூலமாக விடுக்கப்பட்ட அறிக்கையில் இது ஒரு ஒருதலைப்பட்சமாக அமெரிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும்.

சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அதை மீறும் விதமாக அமெரிக்கா நடந்துகொள்ளும் விதம்  இரு நாட்டு  உறவு எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது 

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தற்போது ஐரோப்பாவில் சீனாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் இருப்பதனால் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவிக்கையில், “அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக” தூதரகத்தை மூடுமாறு பணிக்கப்பட்டதாக கூறினார்.

இருந்தபோதும் இரு நாடுகளை பாதிக்கும் மிகப்பெரிய இந்த நடவடிக்கைக்கு சரியான காரணம் இதுவரை அறிவிக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *