டிஜிட்டல் முறையில் பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை
பதிவாளர் என் சி விதானகே டிஜிட்டல் முறையில் பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின் இம்முறை அமல்படுத்தப் போவதாகவும் இதுவரை பிறப்புச் சான்றிதழ்களில் காணப்படும் பெற்றோரின் விவாக நிலை மற்றும் இனம் ஆகியவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் புதிய பிறப்பு சான்றிதழில் அனைவரும் இலங்கையர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறினார்
மேற்கூறிய அனைத்தும் பொதுமக்கள் இணையதளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

