மீளப் புனரமைக்க முடியாமல் பிளவுபட்ட கட்சியை நம்புவதை விட எங்களை நம்பினால் தேசிய வளங்களுக்கு பாதுகாப்பு; பிரதமர் தெரிவிப்பு
ஏற்கனவே பல தேசிய வளங்களை விற்று எதிர்காலத் தலைமுறையினரை கேள்விக்குறி ஆக்கிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இன்னும் சொச்ச வளங்களை கொள்ளையடிப்பதற்காக மட்டுமே மக்கள் ஆதரவை கோருகிறார்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கண்டியில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அவர் மேலும் இங்கு கூறுகையில்,
பலமான அரசாங்கத்தை அமைக்க மக்களின் அமோக ஆதரவு தேவை இதில் கண்டிப்பாக மூன்றில் இரண்டு பங்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் இல்லையென்றால் திருடர்களுக்கு ஒப்பான ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியும் நம் தேசிய வளங்களை சூறையாடுவார்கள்.
பிளவுபட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நிலையில்லாத அரசியல் கட்சிக்குள் தாம் இருப்பதாகவே எண்ணிக் கொண்டுள்ளனர் இவர்கள் அவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு எமது கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்

