http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஒலிம்பிக், பிரெஞ்ச் ஓபன்,விம்பிள்டன் அடுத்து டி-20 உலக கோப்பையும் ஒத்திவைக்கப்பட்டது

16 அணிகளை ஒருங்கிணைத்து உலக கோப்பை நடத்துவது என்பது கொரோனா பரவல் காலத்தில் முடியாத காரியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு முடிவு செய்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று இத்தொடரை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக(ஐ.சி.சி.,) இதுகுறித்து முடிவெடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த ஐசிசி, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு முடிவை அடுத்து வேறு வழியில்லாமல் ஒரு முடிவுக்கு வந்தது.

ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக், பிரெஞ்ச் ஓபன்,விம்பிள்டன்கிராண்ட்ஸ்லாம் தொடர்களுக்கு பின் டி20 உலக கோப்பையும் சேர்ந்துகொண்டது

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி மனு சானே கூறுகையில்,‘‘உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பாதுகாப்பான முறையில் ‘டுவென்டி–20’ தொடரை நாங்கள் வழங்க வேண்டும். தற்போதுள்ள சூழலின் அனைத்து விஷயங்களையும் கவனமாக ஆராய்ந்த பின் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை ஒத்திவைப்பது என முடிவெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்தையும் கண்காணித்து 2021, 2022, 2023 உலக கோப்பை தொடர்களை பாதுகாப்பான முறையில் தொடரை நடத்த ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது,’’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *