இந்தியாவை மேலும் பல சீன நிறுவனங்கள் உளவு பார்ப்பதாக இந்திய மத்திய அரசு குற்றச்சாட்டு
லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய அரசு இந்தியாவை உளவு பார்ப்பதாகக் கூறி சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் புதிதாக பல சீன நிறுவனங்கள் மீது சீன ராணுவத்துக்கு உளவு பார்ப்பதாகக் கூறி இந்தியா அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதில் பிரபல நிறுவனங்களான அலிபாபா, ஹூவே போன்றவையும் அடங்கும் இவை அனைத்தையும் இந்தியா தடைவிதிக்க மிக விரைவாக பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

