போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் பாரிய எண்ணிக்கையிலான குழுக்கள் கண்டுபிடிப்பு
மேல் மாகாணத்தில் போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 25க்கும் மேற்பட்ட பாதாள குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேல்மாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
இவர்களில் 20 குழுக்கள், 388 சந்தேகநபர்கள் தொடர்பாக முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளதாகவும் இத்தகைய நபர்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் சிலர் வெளிநாடுகளிலும் மற்றும் சிலர் பிணையிலும் வெளியே உள்ளனர் என்றும் இவர்களே நாட்டில் தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்

மேலும் வெளிநாட்டில் உள்ளவர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை இக்குழுவை சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகதாகவும் கூறினார்.
சமீபத்தில் சப்புகஸ்கந்த பகுதியில் கைது செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் நபரும் அவரது மனைவியும் பெருந்தொகையான கடத்தல் பணங்களை தனியார் வங்கியின் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறான கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 21 வாகனங்கள் மற்றும் வீடுகளை பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்குவோம் அல்லது தடை செய்யவும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
