மலையகத்தில் கடும் மழை, நாவலப்பிட்டியில் வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு
மலையகத்தில் இன்று காலை முதல் கடும் மழைபெய்து வருகின்றது.நாவலப்பிட்டி பகுதிக்கு பெய்த பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி தபால் நிலையத்துக்கு முன்னால் உள்ளவீதி நீரில் மூழ்கின.இதனால் நாவலப்பிட்டி கம்பளை ஊடான போக்குவரத்து நாவலப்பிட்டி நகரில் சில மணித்தியாலங்கள் முடங்கிப்போயின.
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.கடந்த சில தினங்களாக மலையகத்தின் பல பிரதேசங்களுக்கு இரவு வேளையிலும் மாலை வேளையிலும் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாலும் வீதியின் பல இடங்களில் வழுக்கும் நிலை காணப்படுவதாலும் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக தங்களின் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


