இலங்கையைப் பாராட்டிய உலக சுகாதார ஸ்தாபனம்; ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ரஸியா பென்ஸே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை நாட்டு அரசாங்கத்தினாலும் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களாலும் மிகவும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் உலகில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றிருப்பது மிக சிறப்பான விடயம் என்று கூறினார்.
உலக நாடுகள் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கையின் சிறந்த சுகாதார கட்டமைப்பும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் அதற்கு ஒத்துழைத்த மக்களின் காரணமாக மட்டுமே இக்கொடிய வைரஸ் பரவலை இந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது இதற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு ஜனாதிபதி அவரது கருத்தைத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்,
It is great to be endorsed by @WHO Country Rep Dr. Razia Pendse on #LKA’s efforts to control #COVID19 more effectively even with modest means, than more resourced countries due to well established Healthcare system & many other agencies – Kudos to all the frontline workers ! pic.twitter.com/H8mGeLpp4z
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 18, 2020
நவீன சுகாதார வசதிகளைக் கொண்ட நாடுகளையும் விட இலங்கையினால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தமைக்குக் காரணம், எமது நாட்டில் மேம்படுத்தப்பட்டிருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளும் ஏனைய பல்வேறு பிரிவினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமேயாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஒப்புதல் அளித்துள்ளமை மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்னணியில் நின்று செயலாற்றிய அனைத்து சேவையாளர்களுக்கும் பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்
