தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கு மட்டுமல்ல தோட்டத்தில் பிறந்த அனைவருக்குமே வீடு.அது தான் தொண்டமான் அவர்களின் கனவு நிச்சயம் அதை நாங்கள் நிறைவேற்றுவோம் இ.தொ.கா நிதிச்செயலாளரும் வேட்பாளருமான ரமேஸ்வரன் தெரிவிப்பு
தோட்டங்கள் கிராமமாக மாறவேண்டும் என்று ஆறுமுகன்தொண்டமான் ஐயாவுக்கு கனவொன்று இருந்தது.தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கு மட்டுமல்ல தோட்டத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் வீடு வரவேண்டும் என்றார்.அதனால் தான் இந்திய அரசாங்கத்துடன் பேசி 4000 வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொண்டோம்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இங்கு இருபத்தைந்து வீடு அங்கு இருபத்தைந்து வீடு என கட்சிவளர்ப்பதற்காக கட்டினார்கள்.இந்திய அரசாங்கம் 10000 வீட்டுத்திட்டங்களை கொடுத்துள்ளார்கள் இந்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் என்ன கனவு கண்டாரோ நிச்சயமாக அதை பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிறைவேற்றுவோம். அதை நிறைவேற்ற சக்தியை நீஙகள் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள் என இ.தொ.கா நிதிச்செயலாளரும் வேட்பாளருமான ரமேஸ்வரன் பொகவந்தலாவை பகுதியில் இன்று 18.07.2020 இடம்பெற்றபிரச்சார கூட்டத்தின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
உங்களுக்கு தெரியும் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பல வாக்குறுதிகளை தந்தார்,பலகனவுகளைகண்டார் இந்த மக்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று.1000 ரூபா சம்பள உயர்வு வர வேண்டும் என்றார் தோட்டங்கள் எல்லாம் கிராமமாக மாறவேண்டும், மலையகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வரவேண்டும் என்றார் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரவேண்டும் என்றார். ஜனாதிபதி அவர்களும் தொண்டமான் ஐயா அவர்களும் 1000 ரூபாவை பெற்றுத்தருவதாக சொன்னார்கள் அதை நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்.நிச்சயமாக அதைப்பெற்றுக்கொடுப்போம்.அதற்கு கம்பனிகளும் தயார் நாங்களும் தயார் ஆனால் அவர்கள் இரண்டு கிலோ தேயிலை மேலதிகமாக கேட்கிறார்கள்.அதனால் தான் 1000 ரூபாவினைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படுகின்றது.ஏற்கெனவே 100 ரூபாயைப்பெற்றுக்கொடுப்பதற்காக 88000 ரூபா இல்லாமல் போனது அதே பிழையை நாங்களும் செய்யக்கூடாது.அதனால் தான் பொதுச்செயலாளர் சொன்னார் தேர்தல் 5 ம் திகதியுடன் முடிந்துவிடும் ஆனால் மக்களை மேலும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று.அவ்வாறே எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 1000 ரூபாவினைப்பெற்றுக்கொடுப்போம். எல்லோரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும் ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவம் தேவையென்று அக்கறையாக உள்ளார்கள்.அதனால் தான் எங்குசென்றாலும் இளைஞர்களின் வருகை அதிகமாக இருக்கின்றது.அவ்வாறு வருபவர்களை இ.தொ.கா இருகரம் கூப்பி வரவேற்கின்றோம் சிலர் காங்கிரஸிற்கு இரண்டு வாக்குகளை அளித்துவிடுங்கள் மிகுதியை அங்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள்.இவர்கள் யாரும் வெற்றிபெரும் வேட்பாளர்கள் இல்லை.தேர்தல் முடிந்தவுடன் சென்றுவிடுவார்கள்.காங்கிரஸில் உள்ளவர்கள் தான் வெற்றிபெருவார்கள்.தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் தான் உள்ளது.இப்பகுதியில் நாங்கள் மூவரும் வெற்றிபெருவோம்.ஆகவே மொட்டு சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெறச்செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
