http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கையில் கொரோனாவின் 2 ஆவது அலையை தடுப்பது  தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கை

இலங்கையில் கொரோனாவின் 2 ஆவது அலையை தடுப்பது  தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் 6 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

நாட்டில் தற்போதைய நிலைமையில் பொதுமக்கள் மற்றும் அரசாங்கம்  கொடிய  தொற்றின் தாக்கம் குறித்த அலட்சியத்தை போக்க பின்வரும் பரிந்துரைகள் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவை

1)நோயாளிகளுடன் தொடர்புபட்டவர்களை எதுவித தவறுகளும் இன்றி இனங்காணும் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்களையும் இராணுவ புலனாய்வு உறுப்பினர்களையும் வினைத்திறனாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

2)நாளொன்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டும்.

3)நோயாளர்களை மிகத்துரிதமாக பரிசோதனை செய்ய வேண்டும்.

4)நோயாளிகள் இனங்கானப்படும் பிரதேசங்களை அறிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளை முடக்குதல் அவசியமாகும்.

5)முழு நாடும் உள்ளடங்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து இலங்கையில் நோயின் பரம்பலை அறிந்து தெளிவூட்டுதல்.

6)கடற்படை முகாம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குழுக்களாக உருவாகியுள்ள நோயாளிகளின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடத்தினூடாக ஆபத்தான பகுதியில் உள்ள வேலைத்தளங்களில் வேலையாட்களை பகுதியாக பிரித்து பயன்படுத்துவதன் மூலம் குழுக்களாக நோயாளிகள் உருவாகுவதைத் தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *