http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல்

கடந்த 13 ஆம் தேதி  ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நோயின் தாக்கம் மிகமிகக் குறைந்த அளவில் இருந்ததால் இருவரையும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள சுகாதார துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.  இதனால் கடந்த சில நாட்களாக இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இவரது கணவர் அபிஷேக் பச்சனும் மற்றும் அவரது தந்தை அமிதாப்பச்சனும் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *