உலக அளவில் அதிக பிசிஆர் பரிசோதனைகளை செய்த நாடுகளில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஒரு கோடியே 39லட்சத்து , 82 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 465 பேர் பலியாகி உள்ளனர். 83 லட்சத்து 07 ஆயிரத்து 516 பேர் மீண்டுள்ளனர். உலக அளவிலான பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்தடுத்த இடங்களில் பிரேசில் இந்தியா ரஷ்யா ஆகிய நாடுகளும் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 35 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் அதிக பிசிஆர் பரிசோதனைகளை செய்த நாடுகளில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறுகையில் அமெரிக்காவில் இதுவரை பிசிஆர் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது உலக அளவிலேயே அதிக பரிசோதனை செய்தல் நாடுகளில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன என்று கூறினார். இந்தியாவில் 1.2 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் நாங்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளோம்” என்றார்
