மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள்
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டமொன்றில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டது இதன்போது கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தினார். எவ்வாறு இருப்பினும் அடுத்த வாரமளவில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாமென எதிர்பார்க்க முடியும் என்றார்.

