http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய நாளை முதல் பொலிசார் சிறப்பு நடவடிக்கை

நடைபாதைகளிலும், பிரதான பாதையின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு எதிராக நாளை முதல் பொலிசார் சிறப்பு நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளதாவது, வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தவிர்த்த ஏனைய இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய  பொலிஸார் சிறப்பு நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

இவ்வாறு வாகனங்களை நிறுத்தும் பொழுது நடைபாதையில் பயணிப்பவர்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகின்றது.  இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.  மீறி செயல்படுபம் வாகனத்தின் உரிமையாளர் அல்லது சாரதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்குறிப்பிட்ட வாகனம் பொலிசாரினால் எடுத்துச்செல்லப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் அக்குறிப்பிட்ட வாகனத்தை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் இழுத்துச் செல்லப்படும் பொழுது அதனால் ஏற்படும் செலவினத்தை வாகனத்தின் உரிமையாளர்  செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.   ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான தண்டப்பணம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *