அபிவிருத்திக்கும் அரசதொழிலுக்கும் அடித்தளமிட்டது இ.தொ.க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளரும் வேட்பாருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 80 வருடகாலமாக ஒன்றுமே செய்யவில்லை என்று.கூறுகிறார்கள் உங்களுக்கு தெரியும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இ.தொ.கா பல சேவைகளை செய்துள்ளது.ஓட்டு உரிமையை வாங்கிக்கொடுத்தது சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா.இன்று சிலர் கூறுகின்றனர் பிரஜாவுரிமையை நாங்கள் தான் வாங்கிக்கொடுத்தோம். என்று பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா எவ்வாறான தியாகங்களை செய்தார் என்பது அன்றிருந்த பெரியவர்களுக்கு தெரியும்.அதேபோல் ஐக்கியத் தேசியக்கட்சி பிரஜாவுரிமையை எங்களுக்கு தாம்பாலத்தடடில் வைத்து தரவில்லை. சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா பல தியாகங்களை செய்து தான் பிரேமதாச அவர்களிடமிருந்து பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்தார்.மலையக மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தது இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் என்பதை சிலர் மறந்துவிட்டு பேசுகிறார்கள்.மலையக மக்கள் ஏனைய மக்களைப் போன்று சமஉரிமையுடன் வாழ வழிசெய்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.அதேபோல் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் காலத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் காலகட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு இருக்கிறோம்.பல்வேறு அரசநியமனங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் காலத்தில் பெற்றுக்கொடுத்து இருக்கின்றோம்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் , ஆசிரியர் நியமனங்கள், தபால் உத்தியோகத்தர்கள்,தொடர்பாடல் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல அரசநியமனங்களை பெற்றுக்கொடுத்தது கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் என்பதை சிலர் மறந்து இருக்கின்றனர்.என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (16) ஹட்டன் பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
அதேபோன்றே இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களிடம் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கின்றோம்.தோட்டங்கள் கிராமங்களாக மாறவேண்டும் என்பதில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உறுதியாக இருந்தார் நிச்சயமாக நாங்கள் அதை நிறைவேற்றுவோம்.நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்றார். அதற்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் பலமுறை நுவரெலியாவிற்கு வருகைதந்து அதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.பலவேலைத்திட்டங்களை உருவாக்கியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.இன்று சில அரசியல்வாதிகள் நாங்கள் எதுவுமே செய்யாது புதிதாக வந்து வாக்கு கேட்பது போல் கதைக்கின்றனர்.நான் மத்தியமாகாண தமிழ்க்கல்வியமைச்சராக இருந்த ஒருவருடத்தில் 742 பேருக்கு பட்டதாரி நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறேன் அதுமட்டுமில்லாது இரண்டாயிரம் இலட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து நுவரெலியா , மாத்தளை,கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு பல்வேறு கட்டிடங்களை பெற்றுக்கொடுத்திருக்கின்றேன்.என்னுடைய அமைச்சின் கீழ் இருந்த எட்டு அமைச்சுக்கள் மூலமாக பலஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருக்கின்றேன்.இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றியிலே எல்லாரும் பங்காளர்களாக இருக்கின்றனர்.வர்த்தகர்கள், ஆசிரியர்கள் , அரச உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இ.தொ.காவின் பலப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.ஒரு நல்ல தலைவரை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே எல்லோரும் இவ்வாறு ஒன்றிணைந்து இருக்கின்றனர்.யார் என்னசொன்னாலும் நுவரெலியா மாவட்டத்தை பொதுஜன முன்ணனி சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றும் நாங்கள் அனைவருமே வெற்றியீட்டுவோம்.அன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது சிலர் சொன்னார்கள் பெருந்தோட்டப்பகுதிகளுக்கும் வெள்ளைவேன் வரும் மலையக இளைஞர் யுவதிகள் கொழும்பில் சென்று பணிபுரியமுடியாத நிலைவரும் என்று சிலர் அதேவாயால் தான்கூறுகின்றனர் தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் தான் அமைச்சராக இருப்போம் என்று சஜித்பிரேமதாச அவர்களின் அணி 90 ஆசனங்களையே பெறும் என்கிறார்கள் இன்னொருவர் கூறுகின்றார் முயற்சி செய்கின்றோம் என்று.இதனால் தான் மக்கள் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்துள்ளனர்.அவர்கள் 90ஆசனம் 60 ஆசனம் என கூறிக்கொண்டு இருக்கும்போது நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நாட்டுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுத்தருவதற்கான வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.அதனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெருவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த சமூகத்திற்கு தலைமை தாங்குவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.சிலர் இங்கு அமைச்சராக இருந்த சென்றிருக்கலாம்.சமூகம் என்ற ரீதியில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தான். சிலர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததாக கூறுகின்றனர். அவர்கள் யாராவது மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்திருக்கின்றனரா? பொலிஸ் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தது யார்? ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தது யார் ?சிலர் அதே வாயால் தான் கூறுகின்றனர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு ஒன்றையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர் சஜித் பிரேமதாசதான் மக்களுக்கு எல்லாம் செய்தார் என்று.அப்படியென்றால் அவர் அமைச்சராக இருந்தபோது இந்த மக்களுக்கு 50 ரூபாவினை பெற்றுக்கொடுத்திருக்கலாம் தானே.மலையக மக்களின் மீது அக்கறை இருந்தால் அதை பெற்றுக்கொடுத்திருக்கலாமே. ஏன் அதைச்செய்யவில்லை. இதுதான் எங்களது கடைசி சம்பளப் பேச்சுவாரத்தை.இனி நாங்கள் எதிர்ப்பார்ப்பது என்பது என்னவென்றால் பெருந்தோட்டங்கள் சிறுதோட்ட முதாலாளிகள் ஆகவேண்டும்.இன்று அல்ல இந்த கோரிக்கையினை நாங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னே முன்வைத்திருந்தோம்.அதற்கான வேலைத்திட்டங்களும் இப்போது நடந்துகொண்டு இருக்கின்றது.யார் என்னவேண்டுமானாலும் அரசியலுக்காக கூறலாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு என ஒரு நோக்கம் இருக்கின்றது.நாங்கள் அதை நிறைவேற்றுவோம்.
சில அரசியல்வாதிகளல் இ.தொ.காவையும் ஆறுமுகன் தொண்டமானையும் தான் பாடிப்பாடி அரசியல்செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கையிலெடுத்திருப்பது கொட்டகலையில் இராணுவமுகாம் அமைப்பது என்பது.இது ஒரு பௌத்த நாடு. இங்கு இந்துக்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.இந்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இராணுவமுகாமும் பொலிஸ் நிலையமும் அமைக்கலாம் தானே.கொட்டகலையில் இராணுவமுகாம் அமைப்பதற்கான நோக்கம் ஒரு அனர்த்தம் ஏற்படும் போது நுவரெலியவில் இருந்தும் லக்சபானவில் இருந்தும் தான் இராணுவத்தினர் வருகின்றனர்.இப்பிரதேசத்தில் அதிகமாக அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன அதுமட்டுமில்லாது கொவிட் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தான் அவர்கள் அங்கு தற்காலிகமாக ஒரு முகாமை அமைத்து இருக்கிறார்கள்.
இன்று மலையகத்திலே வாக்குகேட்கும் சிலர் தமிழில் பேசும்போது ஒருவாரும் சிங்களத்தில் பேசும் போது வேறு மாதிரியும் கதைக்கிறார்கள்.தமிழில் பேசும்போது தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் தான் அமைச்சர்கள் என்கிறார்கள் சிங்களத்தில் பேசும்போது கோட்டபாய அவர்கள் ஒரு இனவாதி என்கிறார்கள்.நாங்கள் தமிழில் பேசினாலும் ஒன்றுதான் சிங்களத்தில் பேசினாலும் ஒன்றுதான்.
