ஆயிரம் ரூபாவின் போர்வைக்குள் மலையகத்தின் அனைத்து பிரச்சினைகளையும் மூடி மறைத்து விட்டார்கள். வேட்பாளர் ஜீவன் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
மலையகத்தில் இன்று பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன,வீடு இல்லை,காணியில்லை,குப்பைகொட்டுவதற்கு இடமில்லை. சுத்தமான குடிநீர் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை,இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பில்லை.,இவ்வாறு எத்தனை பிரச்சினைகள் இருக்கும் போது, கடந்த அரசாங்கம் ஆயிரம் ரூபா போர்வைக்குள் இருந்து அனைத்து பிரச்சினைகளையும் மறைத்துவிட்டது. அதற்கு காரணம் கடந்த அரசாங்கத்தின் தலைமைத்துவம் சரியில்லை. என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நேற்று (15) மாலை அக்கரபத்தனை வேவர்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் அங்கு தொடர்;ந்து உரையாற்றுகையில். கடந்த நாலரை ஆண்டு காலமாக நீங்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை பேசினீர்கள். அது நிரந்தர தீர்வல்ல.காரணம் இன்றுள்ள பொருளாதார நிலைமையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு காணாது. ஆகவே அது எனது தந்தை உங்களுக்கு அளித்த வாக்குறுதி அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதை உங்களுக்கு நிரந்தர தீர்வாக உங்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும். அதனை நான் நிச்சயம் செய்வேன்.
நான் தேர்தல் ஆரம்பிக்கும் போது கல்வியை பற்றி பேசினேன் சுகாதாரத்தினை பற்றி பேசினேன்,பொருளாதாரத்தினை பற்றி பேசினேன். இப்போது தான் அவர்களும் அதைப்பற்றி பேச தொடங்கியுள்ளார்கள்.அதிலிருந்தே விளங்குகிறது தலைமைத்துவம் என்றால் என்ன அரசியல் என்றால் என்ன?என்று.நான் கேள்வி பட்டேன். சஜித் பிரேமதாச தெரிவித்ததாக உங்களுக்கு பிரஜாஉரிமையினை பிரேமதாச அவர்கள் வாங்கி கொடுத்ததாக நான் இன்றும் அவர் மீது மறியாதை வைத்துள்ளேன். காரணம் அவர் அடிமட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், ஆனால் அவர் இன்றும் விமர்சன அரசியலை மாத்திரம் தான் செய்து வருகிறார்.இதே போன்று தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆயிரம் ரூபாவினை ரணில் விக்கிரமசிங்க சொல்லவில்லை என்றார.; அதனை தொடர்ந்து தொண்டமானின் பெயர் பலகையை நான் களற்றவில்லை என்றார்.சிலர் நேர்காணலில் தெரிவித்து வருகிறார்கள் ஐக்கிய மக்கள் சக்தி 52 சதவீதத்தில் வெற்றி பெரும் என்று. சஜித் வேட்பாளராக இருக்கும் போதே 15 லட்சத்தில் தோல்வியடைந்தார்.அப்படி இருக்கும் போது. அவருக்கு கீழ் இருக்கும் வேட்பாளர்கள் எப்படி 52 சதவீதத்தில் ஜெயிப்பார்கள். இது வேடிக்கையாக உள்ளது,இதிலிருந்து ஒன்று மாத்திரம் புரிகிறது. எமது மக்கள் அவர்கள் எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள். என நினைக்கிறார்கள்.மலையகத்தில் இன்று போதைப்பொருள் அதிகரித்துள்ளது. அதற்கு யார் காரணம.; நான் யாரையும் குறை கூற மாட்டேன.; அதற்கு நாம் தான் காரணம். இன்று இது தொடர்பாக இங்குள்ளவர்களும் பாடசாலை மாணவர்களும் விழிப்புணர்வின்றி இருக்கினற்னர்.இன்று இளைஞர்கள் வேலையின்றி அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசாங்கம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை?என்று கூற முடியாது.வழங்கியது ஆனால் அதனை பெற்றுக்கொடுக்க தெரியவில்லை.கடந்த காலங்களில் எனது தந்தை ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, விவசாயம் என எத்தனையோ விடயங்களை செய்து கொடுத்தார.;; அதனால் பலருக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த நாலரை வருட காலத்தில் இவ்வாறான எத்னையாவது செய்து கொடுத்தார்களா? சிந்தித்து பாருங்கள்.இன்று தோட்டங்கள் தோறும் பிரஜாசக்தி நிலையங்கள் உள்ளது. நாங்கள் இருக்கும் போது அதில் இளைஞர்கள் படித்தார்கள். ஆனால் இன்று நிலையம் இருக்கிறது கணணி,மற்றும் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன.இவ்வாறான தலைமைத்துவத்தினை தான் கடந்த காலங்களில் தெரிவு செய்தீர்கள்.மாற்றம் வேண்டும் என்று நினைத்தீர்கள.; அதனை புரிந்து கொண்டீர்கள்.ஆகவே உங்களுக்கு தெரியும் மலையகத்தின் அடையாளம் யார் என்று.நிச்சயம் எனக்கு இந்த மலையகத்தினை மாற்ற முடியும் அதற்கு உங்களது ஒத்துழைப்பு அவசியம் உங்களுக்கு தெரியும் மலையத்திலிருந்து யார் முதலில் வருகிறார்களோ அவர் தான் சர்வதேச ரீதியில் மலையகத்தின் அடையாளம்.எனவே எனக்கு நம்பிக்கை உள்ளது மலையகத்திற்கு சிறந்த பிரதிநிதித்துவத்தினை வழங்க முடியும் என்று என்மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் இ.தொ.காவில் போட்டியிடுபவர்களை வெற்றிப்பெறச் செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
