கட்சி வேறுபாடுகளை மறந்து இளம் தலைமைத்துவத்தினை உருவாக்க அனைவரும் அணிதிரள்கிறார்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளரும் வேட்பாளருமான எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை தொடர்ந்து மலையகத்தில் உள்ள இளைஞர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சமூகங்கள் அனைவரும் இன்று கட்சி வேறுபாடுகளை மறந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானை இளம் தலைவரை தெரிவு செய்ய வேண்டும.; என அணிதிரண்டு வருகிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்pன் நிதிச்செயலாளரும் நவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று (14) திகதி மாலை டிக்கோயா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.அதனை நாங்கள் எதிர்வரும் காலங்களில் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
உங்களுக்கு தெரியும் இந்த அரசாங்கம் தான் இன்னும் 10 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கப்போகிறாரகள.;.ஆகவே பாரளுமன்றத்தில் அரசாங்கத்தின் பலமுள்ள பங்காளி கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் இருக்கும். இதனை உணர்ந்து தான் தலைவர் தொண்டமான் ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்தார்.அவர் ஆதரவு வழங்கும் போது 32 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்.அதில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம், மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம்,படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு,பேன்ற அடங்குகின்றன.ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த உடனேயே இன்று அதில் பல கோரிக்கைகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் பெருவாரியானவர்கள் ஆதரவு வழங்கா விட்டாலும் கூட இன்று அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு சிந்தித்தரோ அதே போல் இந்த தேர்தலில் ஐந்து பேரை நிறுத்தியுள்ளார் அதற்கு காரணம் பாரளுமன்றத்தில் ஒரு பலமான தொழமை கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்க வேண்டும.; என்று தான் அவ்வாறு களமிறக்கியுள்ளார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் ஐந்து பேரும் வெற்;றி பெருவது உறுதியாகியுள்ளது.ஏனென்றால் இன்று பல கூட்டங்களுக்கு செல்லும் போது இளைஞர்கள் வருகை எமக்கு பெரும் சக்தியினையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்தி இருக்கின்றது.மலையகத்தில் வர்த்தகர்கள் ஏனைய சமூகங்கள் அனைவரும் இணைந்து மலையகத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஒரு பல கட்சியினை கட்டியெழுப்ப வேண்டும். என்ற எண்ணத்தில் செயப்பட்டு வருகிறார்கள.; ஆகவே இம் முறை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றி பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
