“பல நாடுகளின் தவறானமுடிவுகளால் உலகம் இன்று பேரழிவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது ” டெட்ரோஸ் அதானோம்
நாம் அடிப்படை சுகாதாரத்தை கடைபிடிக்காவிட்டால் தற்பொழுது உள்ள நிலைமையை விட மிக மோசமான சூழ்நிலைக்கு கொரோனா நம்மை தள்ளிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார் உலக சுகாதார அமைப்பில் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.

சில நாடுகள் மிக சிறப்பான முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பல நாடுகளின் அலட்சியத்தால் இன்று கொரோனா வைரஸ் மிக மோசமான பாதையை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றது. கொரோனா நம்முடன் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தவறான திசையில் சென்றுகொண்டிருக்கும் நாடுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இதை கருத்தில் கொள்ளாத பட்சத்தில் இப்போது இருக்கும் நிலைமையைவிட கொரோனா படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை என்று எச்சரிக்கை விடுத்தார்.

