இன்றையதினம் மலையக பகுதியில் தபால் மூல வாக்கெடுப்புக்கள் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக மிக அமைதியாக நடைபெற்றன.
அரச பணியாளர்களுக்கான தபாமூல வாக்கெடுப்புக்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகின.நேற்றைய சுகாதார துறையினரை சேர்ந்தவர்கள் தபால் மூல வாக்குகளை மஸ்கெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
இன்றைய தினம் (14) கல்விச்சேவையினை சேர்ந்தவர்கள் தமது வாக்குகளை ஹட்டன் வலயத்தின் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலய்த்தில் ஒழு செய்திருந்த தபால் மூல வாக்கெடுப்பு நிலையத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.


இதன் போது வாக்களர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபபட்டுள்ள உத்தியோகஸத்தர்கள் சுகாதார பொறிமுறையினை பின்பற்றி வாக்கெடுப்பில் ஈடுபடுவதனை காணக்கூடியதாக இருந்ததுடன் அரச ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்கெடுப்பில் ஈடுப்பட்டனர்.


குறித்த வாக்கெடுப்பு நிலையத்தில் சுமார் 1804 பேர் தபால் மூல வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திலும்; பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டிருந்ததுடன் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றும் நாளையும் குறித்த நிலையத்தில் காலை 7.00 மணியளவில் ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 5.00 வரை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாக்கெடுப்பில் ஆசிரியர்கள் அதிபர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டதனை காணக்கூடியதாக இருந்தன.
