http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மக்களுக்கு துன்பம் வரும்போது நெருங்கிவரும் மக்கள் பிரதிநிதிகள் நாம் தான். நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவிப்பு.

மலையக மக்களுக்கு பிரச்சினை என்று வரும் போது மக்கள் பக்கம் நின்று பல சேவைகளை மலையக பகுதியில் முன்னெடுத்திருக்கிறோம்.மக்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருக்கிறோம்,பிரதேசசபைகளை அதிகரித்து இருக்கிறோம்,வீதி அபிவிருத்தி அதிகாரசபைகளை உருவாக்கியிருக்கிறோம்.கொரோனா காலத்தில் எமது மக்கள் கஸ்ட்டப்பபடும் போது மலையக பகுதியில் உள்ள சுமார் 15000 குடும்பங்களுக்கு எமது சொந்த நிதியில் நிவாரண உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறோம். கொழும்பில் வாழும் எமது உறவுகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட போது எமது உயிரையும் துச்சமாக மதித்து அவர்களுக்கு போய் நிவாரண உதவிகளையும் தேவையானவற்றையும். செய்து கொடுத்து இருக்கிறோம்.இதனை தேர்தலக்காக சொல்லவில்லை. மக்களுக்கு துன்பம் என்று வரும் போது மக்கள் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் என்பதனையே கூற விரும்புகிறேன்.என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
அக்கரைபத்தனை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இன்று பல்வேறு வேலைத்திட்டங்களை மலையகப்பகுதியில் முன்னெடுத்துவிட்டே உங்;களிடம் வந்து தேர்தல் கேட்கிறோம் ஆனால் கடந்த காலங்களில் மலையகப்பகுதியில் எவ்வித அபிவிருத்தியும் செய்யாதவர்களும்,வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களும் இங்கு வாக்கு கேட்கிறார்கள் அவர்கள் வாக்கு கேட்பது வெற்றி பெறுவதற்காக அல்ல மலையகப்குதியில் உள்ள எமது பிரதிநிதித்துவத்தினை குறைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.ஆகவே மக்கள் அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க கூடாது நாங்கள் கடந்த காலங்களில் கல்வி அபிவிருத்தி வீட்டுத்திட்டம் பாதை அபிவிருத்தி என பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். செய்வோம் செய்து தருவோம் என்று வாக்கு கேட்கவில்லை.கடந்த எட்டு மாத காலமாக நாங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்கள் முடங்கி போய் உள்ளது.அதனை தொடர்வதற்காக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *