ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோளுக்கிணங்க மூடப்பட்ட “இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லை” மீண்டும் திறப்பு
கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட வாகா எல்லையை மீண்டும் திறக்க ஆப்கானிஸ்தான் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாகிஸ்தான் வழியே வாகா எல்லையை கடந்து இந்தியாவுக்குள் வருவது வழக்கம்.
கொரோனா காரணமாக வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்றுமதி தடைபட்டது.

வாகா எல்லையை மீண்டும் திறக்குமாறு பாகிஸ்தானிடம் ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று நாளை முதல் ஆப்கானிஸ்தான் ஏற்றுமதிக்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

