ஒன்றும் செய்யாதவர்களுக்கு ஏன் மீண்டும் வாக்களித்து ஏமாற வேண்டும்? முரளி கேள்வி.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் முரளி இவ்வாறான கேள்வியை எழுப்பினார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் எனக்குமிடையில் 20 வருடங்களாக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அவர்களே வெற்றிபெறபோகின்றனர். அவர்கள் தலைமையிலேயே ஆட்சி அமையப்போகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்குமாறும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி என்னிடம் கோரிக்கை விடுத்தார். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதால் ஏற்கவில்லை. ஆளுநர் பதவியையும் வேண்டாம் என்றேன். நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலுக்கு வரவும்மாட்டேன். பணம் சம்பாதிக்கவேண்டிய தேவையும் இல்லை. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சமுக சேவகராகவும் மரணிக்கவே விரும்புகின்றேன்.
இவ்வளவுகாலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. ஒன்றும் செய்யாதவர்களுக்கு ஏன் மீண்டும் வாக்களித்து ஏமாற வேண்டும் என்றார்.
