http://ceylononline.lk/

Ceylon Online News Portal

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகம் முடக்கம் – கொரோனா தொற்று சந்தேகம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *