http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வாக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மலையக பகுதியில் உருவாகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கே.கே.பியதாச தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)

காலையில் ஒரு கட்சித்தலைவரையும் பகலில் மற்றுதொரு கட்சித்தலைவரையும் கல் பங்களவுக்கும் சென்று என்னிடம் இத்தனை வாக்குகாளர்கள் இருக்கிறார்கள. எனக்கு இவ்வளவு தாருங்கள் என்று வாக்குகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கூட்டம் ஒன்று தற்போது மலையக பகுதியில் உருவாக்கியிருப்பதாக ஐக்கி தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கே.கே. பியதாச தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று சிலர் கூறுகிறார்கள். டெலிபோன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும.; என்று ஏன் தோட்டத்தொழிலாளர்கள் தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டும். அவர் அமைச்சாரக இருக்கும் போது தோட்டப்பகுதியில் கிராமம் ஒன்றினை உருவாக்கினாரா?அல்லது தோட்டத்தில் உள்ள யாராவது ஒரு இளைஞர் யுவதிக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தாரா? தோட்டத்தை விடுங்கள் நகரத்திலே அல்லது கிராம்த்திலே ஏதாவது ஒரு வேலையை செய்து கொடுத்திருக்கிறாரா? அவர் முழு இலங்கையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தை நினைத்து தான் செயப்பட்டார.; ஆகவே நாம் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அதே நேரம் இன்று பொது பெரமுனவின் கூட்டம் முழுவதும் ரத்துச் செய்துள்ளது ஏன் என்றால் கொரோனாவுக்கு பயந்து இந்தியாவில் இன்று ஆயிரக்கணக்கானோர் சாகிறார்கள்.நாட்டில் இன்று கொரோனாகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் தேர்தலை நடத்த தான்; முயற்சி செய்கிறது மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தேர்தலை எப்படியாவது நடத்தி விடுவோம் என்று நினைக்கிறது நான் என்றால் அதற்கு விருப்பமில்லை முதலில் மக்கள் பற்றி தான் சிந்திக்க வேண்டும். மக்கள் வாழ்ந்தால் நாம் எதனையும் செய்யலாம்.

இதே நேரம் நுவரெலியா மாவட்டத்திற்கு மொட்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் இரானுவம் தான் ஆட்சி நடத்தும் மாவட்டச் செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு இரானுவத்தினர் தான் இருப்பார்கள் எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *