ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் ஹாங்காங் மக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 மேற்பட்ட ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்திரேலிய நிரந்தர குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது சிறப்பு தகுதி வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற வழிவகை செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் ஆஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
