சுகாதார முறைமைகளை உதாசீனப் படுத்தினால் சகல பிரதேசங்களில் நோயாளர்கள் இனங் காணப்படலாம் – அனில் ஜாசிங்க எச்சரிக்கை

அரசியல் கட்சிகளும் மக்களும் வெவ்வேறு குழுக்களும் இந்த நிலைமையை உதாசீனப்படுத்தும் நிலைமையே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை கொரோனா தொற்றுக்குள்ளான 103 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இனங்காணப்பட்ட 103 நோயாளர்களில் 76 பேர் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருபவர்களாவர்.
14 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை அண்மித்தவர்கள் என்பதோடு நால்வர் ராஜங்கனையில் இனங்காணப்பட்ட நோயாளருடன் தொடர்பினைப் பேணியவர்களாவர்.
அத்துடன் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2பேரும், பெலாரஸிலிருந்து நாடு திரும்பிய 5 பேரும், ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் பேரும் அடங்குகின்றனர்.
