http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சற்றுமுன் காலி பகுதியில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த காலி, ஹபராதுவை  பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் கொழும்பு தொற்று நோய் (ஐ.டி.எச்) வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி ஒரு ஆசிரியை என்பதுடன் அவர் கோணபினுவல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.

இதையடுத்து அந்தப் பாடசாலையில் அவருடன் தொடர்புகளைப் பேணிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *