http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அரசியல் வாதிகளுடன் போட்டியில்லை எத்தனோல் போதை பொருள் வியாபாரிகளுடனுயே போட்டியிட வேண்டியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.(வீடியோ இணைப்பு)

நுவரெலியா பகுதிக்கு அபிவிருத்தி திட்டங்கள் வந்தாலும் கூட தோட்டப்பகுதிக்கு அது செல்வதே இல்லை.மக்கள் மத்தியில் எங்களுக்கு உள்ள செல்வாக்கை யாராலும் குறைக்க முடியாது.எங்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அரசியல்வாதிகளுடன் போட்டியில்லை.இப்பொழுது எதனோல் வியாபாரிகளோடும் போதைப்பொருள் வியாபாரிகளோடும் சாராய வியாபாரிகளோடும் தான் போட்டி இருக்கின்றது.அவர்கள் பெருவாரியான பணத்தை செலவழித்து எங்களது இளைஞர்களை மதுவுக்கு போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். என நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசயி கட்சியின் வேட்பாளர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.
இன்று (11) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
மக்களுக்கு நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி சேவையாற்றலாம்.இந்த வர்ணத்துக்காக அல்லது நிறத்துக்காக போட்டியிடவேண்டிய அவசியம் இல்லை.ஏனென்றால் ஐக்கியத் தேசியக் கட்சி என்றாலே பச்சைக்கட்சி என்பது 1948 ல் இருந்து கட்சி ஆரம்பிக்கப்படும் போது இருந்தே இருக்கின்றது.அதனால் தான் ஐக்கியதேசியக்கட்சிக் காரர்கள் சிங்களத்தில் சொல்கின்றார்கள் ‘அப்பே பாட்ட கொல அபிட நே கலபல’ என்று.இவர்களுக்கு என்று ஒரு நிறத்தைக்கூட தெரிவுசெய்யமுடியாத இவர்கள் ஐக்கியத் தேசியக்கட்சியின் நிழலிலே இருந்து சென்ற இவர்களுக்கு மக்கள் எப்படி வாக்களிக்க முடியும். மக்கள் எப்படி இவர்களை நம்ப முடியும்.இவர்களுக்கு என்று நிறத்தை தெரிவுசெய்யமுடியாமல் ஐக்கிய தேசியக்கட்சியின் நிறத்தை களவாடி மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் இன்னும் நிறைய ஏமாற்றுவார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெரும் பதவியை எதிர்ப்பார்த்தார்கள்.அதேபோல் ஐக்கியத் தேசியக்கட்சியில் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது எல்லாருமே அமைச்சரவை அமைச்சராக வரவேண்டும். என எதிர்ப்பார்த்தார்கள.; அப்படிப்பட்டவர்கள் கட்சிக்குள்ளே பிரச்சினையை உருவாக்கி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக இருக்கின்ற சர்வதேச அமைப்பு மூலம் அவரை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தவர்கள் இருக்கின்றார்கள்.ஆனால் ஐக்கியத் தேசியக்கட்சி அங்கத்தவர்கள் அப்படியே இருக்கின்றார்கள். பெரும்பாலானோர் அவர்களுடன் செல்லவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக்கட்சியின் வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கின்றது.ஏனென்றால் செல்லுகின்ற இடமெல்லாம் எங்களுக்கு நியாயமான வரவேற்பு இருக்கின்றது.மலையகத்தை பொறுத்த வரையில் பெருந்தோட்டத்துறையை பொறுத்தமட்டில் பெருந்தோட்டத்துறையில் நடைபெற்ற அபிவிருத்திகள் எல்லாம் ஐக்கியத்தேசியக்கட்சி காலத்திலேயே இடம்பெற்று இருக்கின்றன. என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.கிட்டத்தட்ட 7000 வீடுகள் கட்டியிருக்கின்றோம். 7000 வீடுகளிலே 4000 வீடுகள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. 3000 வீடுகள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.அதே போல் காபட் பாதைகள் உடரதெல்ல காபட் பாதை , வெலிஓயா காபட் பாதைகள் அதேபோல் கம்பெரலிய திட்டத்தின் கீழ் அநேகமான தோட்டங்கள் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றன.கடந்த காலத்தில் நுவரெலிய பகுதிக்கு அபிவிருத்தி திட்டங்கள் வந்தாலும் கூட தோட்டப்பகுதிக்கு அது செல்வதே இல்லை.மக்கள் மத்தியில் எங்களுக்கு உள்ள செல்வாக்கை யாராலும் குறைக்க முடியாது.எங்களுக்கு அரசியல்வாதிகளுடன் போட்டியில்லை. எனஅவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *