தலைவர் ஆறுமகன் தொண்டமான் சிறப்பான சமூகம் ஒன்றினை கட்டியெழுப்பவே முயற்சி செய்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளரும் வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
தலைவர் அவர்கள் உங்களுக்கு தெரியும் இறுதிவரை இந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும.; இந்த மக்களை எதிர்காலத்தில் ஒரு சிறப்பான சமூகமாக கட்டியெழுப்ப வேண்டும.; என்று தலைவர் அக்கறையாக இருந்தார்.இருந்தாலும் எதிர்ப்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் தலைவர் எங்களை விட்டுபிரிந்தார்.தலைவர் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தாரோ அது அனைத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றும். ஏனென்றால் அந்தசக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இருக்கின்றது .அந்தப்பலத்தை நீங்கள் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் தொண்டமான் அவர்களை வைத்துதான் சிலர் அரசியல் நடத்தினார்கள்.அப்படியான அரசியல்வாதிகள் தான் இருக்கிறார்கள்.இன்று அவர் இறந்த பிறகு ஜீவன்தொண்டமான் அவர்கள் வந்துள்ளார்கள்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் யாரையும் குறைகூறி அரசியல் நடத்தவேண்டிய அவசியம் இல்லை.என நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (11) டிக்கோயா பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏனென்றால் மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள்.கடந்த 5 வருடங்களால் மலையகத்தில் ஒரு ஆட்சி இருந்தது.அந்த 5 வருடங்களில் காங்கிரஸ் தொண்டமான் என அரசியல் நடத்தினார்களே தவிர மக்களுக்கு செய்த சேவை எதுவும் இல்லை.இன்று சிலர் தோட்டங்களுக்கு சென்று 1000 ரூபாவை காங்கிரஸ் பெற்றுத்தரவில்லையென கூறிவருகின்றனர்.உங்களுக்கு தெரியும் இன்று நீங்கள் சரி என்றால் நாளை உங்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் கையொப்பமிட்டு 1000 ரூபாவினை பெற்றுக்கொடுப்பார்.கம்பனிகளும் அதற்கு தயாராக இருக்கின்றனர்.அதற்கான அழுத்தத்தையும் ஜனாபதியும் அவர்களும் பிரதமர் அவர்களும் கொடுத்துள்ளார்கள்.ஆனால் உங்களுக்கு தெரியும் கம்பனிகள் என்ன கேட்கிறார்கள் என்று 2 கிலோதேயிலை மேலதிகமாக கேட்கின்றனனர்.சிலர் எங்களிடம் சொன்னார்கள் தேர்தல் வருகிறது ஆயிரம் ரூபாவை வாங்கிக்கொடுக்கலாம.; என்று ஆனால் பொதுச்செயலாளர்கள் அவர்கள் கூறினார் தேர்தல் 5ம் திகதியுடன் முடிந்துவிடும் ஆனால் தோட்டத்தொழிலாளர்கள் மேலும் தேயிலை பறித்து கஷ்டப்படுவார்கள் ஆகவே நாம் இப்போது இருக்கும் நடைமுறைக்கு தான் 1000ரூபாவை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று.அந்த சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இருக்கின்றது.நாங்கள் சொன்னதுபோல் தொண்டமான் ஐயா சொன்னது போல் 1000ரூபா சம்பள உயர்வினை பொதுச்செயலாளர் தலைமையில் நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.கடந்த 5 வருட ஆட்சியில் 50ரூபா வந்தது 5000ரூபா வந்தது ஆனால் அவர்கள் அப்போது தொண்டமான் அவர்களும் காங்கிரசும் தான் அதைப்பெற்றுக்கொடுக்க தடையாக உள்ளது என்று கூறினார்கள்.ஆனால் அவர்கள் இப்போது அதே வாயால் தான் கூறுகின்றாரகள் 50 ரூபாவினை பெற ரணில்விக்கிரமசிங்க அவர்களும் சஜித் பிரமதாச அவர்களும் தான் தடையாக இருந்தார்கள் என்று.அவர்கள் இன்று ஐக்கியத்தேசியக்கட்சியில் வாக்கு கேட்டு இருந்தால் அந்தக்கட்சி நல்லக்கட்சி என்று கூறியிருப்பார்கள்.வேறு கட்சிக்கு சென்றவுடன் ஐக்கியத் தேசியக்கட்சியை குறைகூறுகிறார்கள். அன்று சஜித் பிரேமதாச அவர்கள் தான் அமைச்சரவை அமைச்சராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் அந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்திருக்கலாம் தானே.இதெல்லாம் தேர்தலுக்காக கூறுகின்றனர்.அன்று சிலர் சொன்னார்கள் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் வந்தால் மலையகத்தில் தோட்டாவுடன் வருவார்கள் என்று ஆனால் இன்று கூறுகின்றனராம் தேர்தல் முடிந்தவுடன் நாங்களும் கோட்டபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவோம். என்று.ஏனென்றால் அப்படி கூறினால் தான் நீங்கள் வாக்களிப்பீர்கள.; என்று அப்படி கூறிக்கொண்டு வருகிறார்கள்.இப்பொழது எங்களுக்கு பெரும் சந்தோசம் ஏனென்றால் இளைஞரகள் கூட்டம் கூட்டமாக எங்களுக்கு ஆதரவு அளித்துக்கொண்டு எங்கள் வெற்றியில் பெரும் பங்காற்றுகின்றனர்.ஏனென்றால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இருக்கும்போது அவரின் அருமை தெரியவில்லை அவரை இழந்த பிறகு தான் பெருந்தலைவரை இழந்துவிட்டோம் என அவர்களுக்கு புரிந்துள்ளது.அதனால் தான் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ஜீவன் தொண்டமான் அவர்கள் தலைமையேற்க வேண்டும் என்று ஆதரவளித்துக்கொண்டு இருக்கின்றனர்.அதற்கும் சிலர்கூறுகின்றனர் ஜீவன் தொண்டமான் புதுமுகம் என்று புதுமுகமாக இருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் தலைவர் பதவி கொடுப்பார்களா?இன்று உங்களுக்கு தெரியும் எத்தனை அமைச்சர்கள் இருந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் ஜீவன் தொண்டமான்.ஆகவே எங்களுக்கு யாரும் நாடாளுமன்றம் போக கற்றுக்கொடுக்கதேவையில்லை நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பீர்கள் நாங்கள் நாடாளுமன்றம் செல்வோம்.ஏனென்;றால் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சக்தி இ.தொ.காவுக்கு இருக்கின்றது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஐவரும் நாடாளுமன்றம் செல்வோம் அதை இன்று மக்கள் தீர்மானித்துள்ளார்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும் என்று.ஆகவே இப்பகுதியில் மக்கள் எங்கள் மூவருக்கும் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
