http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற சிங்கப்பூர் பார்லிமென்ட் தேர்தல்

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்’ கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் பார்லி தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒரு ஓட்டு சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை ஓட்டளித்தனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒட்டு சாவடியில் முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *