http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மவ்பிம சிங்கள பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளரையே பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ அச்சுறுத்

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில், ராடா நிறுவன வழக்கு தொடர்பிலான விசாரணைகள் குறித்து புகைப்பட செய்திகளை சேகரிக்கச் சென்ற, மவ்பிம சிங்கள பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளரையே  பொலிஸ்  பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ அச்சுறுத்தி இவ்வாறு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த புகைப்பட ஊடகவியலாளர் கடமைகளை முன்னெடுக்கவும்,  பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவவினால்  தடை ஏற்படுத்தப்பட்டு, மேல் நீதிமன்ற பொலிஸ் காவலரண் வரை குறித்த புகைப்பட ஊடகவியலாளர் அனைவரும் பார்த்திருக்க  இழுத்து செல்லப்பட்டார்.

இந் நிலையில் பொலிஸ் காவலரனுக்கு  தன்னை இழுத்து சென்ற பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ, அங்கு வைத்து தன்னை தாக்க முற்பட்டதாகவும், அவரது உத்தரவுக்கு அமைய கமராவின் சிப் பரிக்கப்பட்டதாகவும், சம்பவத்துக்கு முகம்கொடுத்த  புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன கேசரியிடம் தெரிவித்தார். இது குறித்து கொழும்பு மேல் நீதிமன்ற பொலிஸ் காவலரணில் முறைப்பாட்டினை தான் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *