நல்லாட்சி காலத்தில் எவ்வித அபிவிருத்தி பணியும் வடக்கில் மேற்கொள்ளவில்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு.
வடக்கு மற்றும் கிழக்கில் 1977 இன் பின் 2005- 2010 ஆகிய காலப்பகுதியில் நாங்கள் ஆட்சியில் இருந்த போதுதான் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அங்கு வாழும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவருவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும்,ஆனால் கடந்த நல்லாட்சி காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வித அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கவில்லை. என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அபிவிருத்தியினை அரசாங்கம் முன்னெடுக்கும் போது வடக்கு தெற்கு என்று பேதம் காட்டவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அம்மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்காது அரசியல் லாபத்திற்காக செயப்பட்டதாக இங்கு பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தற்போது மக்கள் முகம் கொடுத்து வருத் குடிநீர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் இவர் இதன் போது மேலும் தெரிவித்தார். இதே நேரம் வடக்கில் காணப்படும் குறைபாடுகளை தெளிவு படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
