http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சற்று முன் கந்தகாடு தனிமை படுத்தல் நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று.

கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு மையத்தில் 56 பேருக்கு கொவிட் 19 தொற்று பரவியிருப்பதாக சுகாதார விசேட வைத்தியர் பணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் அனுப்பி வைத்துள்ள ஊடக செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிக்கடை சிறைக்கைதி ஒருவருக்கு கொவிட் தொற்று பரவியமை உறுதியானதையடுத்து கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அலுவலர்கள் 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் 56 கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை மாரவில பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக கடமை புரிந்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *