http://ceylononline.lk/

Ceylon Online News Portal

“புகழ்பெற்ற நடிகை ஜெயந்தி மூச்சுத் திணறல்” தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயோதிகம் காரணமாக தற்போது ஜெயந்தி சினிமாவில் நடிப்பதில்லை.சமீபகாலமாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வரும் ஜெயந்தி, தற்போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஜெயந்திக்கு கோவிட் 19 சோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவு நெகடிவ் என வந்து விட்டதாக அவரது மகன் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதலே ஜெயந்திக்கு இது போன்ற சுவாசப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதும் அதே போன்ற பிரச்சினை தான் என்றும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவானை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *