30 வினாடிகளுக்குள் கரைந்து காணாமல் போகும் சிறிய சோப்
தண்ணீர், சோப், 30 வினாடிகள். உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா எதிர்ப்பு போரில், இவை மூன்றும் முக்கியமான ஆயுதங்கள். ஆனால், அடிக்கடி சோப்பால் கை கழுவுவோர் அதிகபட்சம், 5 வினாடிகள் வரைதான் சோப்பை தேய்க்கிறார்கள் என, சில ஆய்வுகள் சொல்கின்றன.

எனவே, கைகளை நுரை வரும் வரை தேய்த்தால், 30 வினாடிகளுக்குள் கரைந்து காணாமல் போகும் சிறிய சோப் வில்லையை, பிரிட்டனின் இயற்கை அழகுப் பொருட்களை தயாரிக்கும், ‘லஷ்’ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, 30secondsoap.com என்ற தளத்திற்கு வந்து, ‘ஆர்டர்’ செய்வோருக்கு, ‘டெலிவரி’ என்ற கூரியர் சேவை மூலம் இலவசமாகவே பிரிட்டனுக்குள் டெலிவரி செய்யவும், லஷ் முன்வந்துள்ளது.சீக்கிரம் கரையும் வில்லை சோப், கொரோனாவை கொல்ல, உலக சுகாதார நிறுவனம் சொல்லும், 30 வினாடி நேரம் வரை சோப்பால் கையை ஊற வைக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதால் அதற்கு ஏகப்பட்டஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன.
