http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இனங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையிலான பேச்சு

அநுராதபுர  யுகத்தில் கட்டப்பட்ட  கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. என்பதற்கான ஆதாரங்கள்  தம்மிடம் உள்ளதாக தெரிவித்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின்  உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்,  யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம்  சபுமல் குமார என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது. என்பதற்காக வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களை  உரிமை கோரமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

வரலாற்று  புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண  விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்பதற்கான  தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர  கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது. போர்த்துக்கேயரது படையெடுப்பினால்  அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும், கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்      சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது. என்பதையும்  அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள்  நல்லூர் ஆலயத்துக்கு உரிமை கோரவில்லை. இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில்  நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மதவழிப்பாடுகள், மற்றும் கட்டிடக்கலை சிற்பங்கள் ஊடாக  உறுதியாகுகின்றன.

ஒரு மதத்தின் உரிமைகள் செயலணியினால் எவ்வித  பாதிப்பும் ஏற்படாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *