http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா நோயாளியுடன் தங்கியிருந்து விடுதலையாகிய கைதிகள் தொடர்பான தகவல்களை சிறைச்சாலை திணைக்களம் சேகரிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்து விடுதலையாகிய நூறுபேர் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் சேகரித்துவருகின்றது.

அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் முதலாவது விடுதியில்  தங்கியிருந்த 189 சிறைக்கைதிகளை பூனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொராேனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வெலிக்கடை சிறைக்கைதி சிறைச்சாலை வைத்தியசாலை முதலாம் விடுதியில் தங்கியிருந்த தினம் முதல் நேற்று 7 ஆம் திகதிவரை அவருடன் தங்கியிருந்த கைதிகள் தொடர்பான தகவல்களை சிறைச்சாலை திணைக்களம் சேகரித்து வருகின்றது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதி தங்கியிருந்த நாள் முதல் இதுவரை கைதிகள் 100 பேர்வரை விடுதலையாகி அவர்களின் இல்லங்களுக்கு சென்றிருப்பதாகவே தெரியவருகின்றது.

அத்துடன் மேலும் 8 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியனுப்பப்பட்டிருக்கின்றனர். இவர்களில் இருவர் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மொனராகலை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 3 பேரும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *