http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பெல்மதுளை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு.

பெல்மதுளை தெனவக்க ஆற்றிலிருந்து இரண்டு இளைஞர்களின்; சடலங்கள் இன்று (08) திகதி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூப்பறிக்கச்சென்ற பொது மகன் ஒருவர் ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதனை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்தே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்கள் இந்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள்; அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்களின் சடங்களில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதால் இவ்விரண்டு இளைஞர்களையும் எவராவது கொலை செய்துவிட்டு குறித்த ஆற்றில் நேற்று முன்தினம் கொண்டு வந்து போடப்படடிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடபாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *