நாட்டு மாட்டு சாணம், கரி, மஞ்சள், சுண்ணாம்பு பயன்படுத்திய ஓவியம் 5.1 கோடிக்கு விற்பனை

ஈஷாவின் சமூக நலப் பிரிவான, ‘ஈஷா அவுட்ரீச்’ அமைப்பு, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் சுற்றுவட்டார கிராமங்களில் ஏப்., 1 முதல் கொரோனா நிவாரணப் பணி மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இப்பணிக்கு நிதி திரட்டும் விதமாக சத்குரு, இரண்டு ஓவியங்களை வரைந்தார்.
அவரது முதல் ஓவியம், 4.14 கோடிரூபாய்க்கு ஏலம் போனது. ஈஷாவின் பிரசித்தி பெற்ற காளையான, ‘பைரவா’ நினைவாக, சத்குரு இரண்டாவது ஓவியத்தைவரைந்தார். இதற்கென நாட்டு மாட்டு சாணம், கரி, மஞ்சள், சுண்ணாம்பு பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம், ‘ஆன்லைன்’ வழியாக ஏலம் விடப்பட்டது. இதில், 5.1 கோடி ரூபாய்க்கு ஓவியம் விற்பனை செய்யப்பட்டது.
ஓவியங்களால் கிடைத்த 9.2 கோடி ரூபாயை சத்குரு, ‘ஈஷா அவுட்ரீச்’ நிவாரணப் பணிக்கு தனது பங்களிப்பாக வழங்கினார்.
