கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இடைக்கால தடை!
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்துவதை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் தமக்கு எதிரான பிடியாணை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்தே, மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
இந்த எழுத்தானை கோரும் மனுக்கள் நேற்று பரீசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி விடயங்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது..
