சாதனை படைக்க பிறந்த மலையக இளைஞர்களை வெறும் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட கூடாது. நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
மலையகத்தில் வாழும் இளைஞர்கள் இன்று ஒரு சிலர் கல்வி அறிவுயில்லை. அதுயில்லை. இது இல்லை. என கேவலப்படுத்துகிறார்கள். அவர்கள் யார் என்று பாரத்தால் நமக்குள்ளே இருந்து கொண்டு நம்முடைய வாக்கினை பெற்றுக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருபப்வர்கள் தான் இவ்வாறு தெரிவிக்கிறார்கள். ஆனால் நாங்கள் தன்மானமிக்கவர்கள் என்பதனை நுவரெலியா மாவட்டத்தில் வாழும் இளைஞர்களும் பெரியவர்களும் எத்தனையோ தடைவைகள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள.; எனவே சாதனை படைக்க பிறந்த மலையக இளைஞர்களை கிள்ளுக்கீரையாக நினைத்துவிட கூடாது என நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

நேற்று மாலை வட்டவளை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த கால தேர்தல்களின் போது ஏனைய மாவட்டங்களை விட நுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் மாறுபட்டது. என்பதனால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேர்தல் முடிவுகள் நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டன.அந்த தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்கள் அளித்த வாக்குகளினால் அவர் வெற்றி பெற்றார்.அதற்கு பிரதான காரணம் இந்த மலையக பகுதியில் வாழும் இளைஞர்கள் அவர்கள் சொல்வதை தான் இன்று பெற்றோர்கள் கேட்கிறார்கள.; ஆகவே நம்மை ஏளனம் செய்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க கூடிய இடம் தேர்தல் மற்றும் தான.; ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருகிறது.இதனை சரியாக பயன்படுத்த வேண்டும் யாராக இருந்தலும் பரவாயில்லை நல்லவர்களுக்கு உங்கள் வாக்குகளை பரிசாக கொடுத்து பலப்படுத்துங்கள் தீயவர்களுக்கு சேவை செய்யாதவர்களுக்கு தண்டனையாக உங்கள் வாக்குகளை அளித்து அவர்களுக்கு ஒரு பாடத்தினை படித்து கொடுங்கள்.தேர்தல் காலம் என்பதனால் பலர் இன்று அற்ப சொற்ப சலுகைகளை கொடுத்து உங்களிடம் வருவார்கள். ஆனால் அதற்கு நாம் அடிபணிந்து விட கூடாது. எமக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக் கூடியவர்களுக்கே எமது ஆதரவினை வழங்க வேண்டும்.நுவரெலியா மாவட்டம் சுற்றுலா தளம் என்பதனால் பலர் விடுமுறை தினங்களில் வருவார்கள். அதே போன்று தேர்தல் காலத்திலும் ஆண்டாண்டு காலமாக இவவ்hறானவர்கள் வருவார்கள.; தேர்தல் முடிந்த பின் அவர்கள் ஓடி விடுவார்கள் கடைசியில் அவர்களின் பின்னால் சென்றவர்கள் அரசியல் அநாதையாகி விடுவது வழக்கமாக இருந்துள்ளது.
நாங்கள் அவ்வாறானவர்கள் அல்ல கடந்த நான்கு ஆண்டுகள் காலப்பகுதியில் பல்வேறு வேலைத்தி;ட்டங்களை உருவக்கியிருக்கிறோம.; மலையக பொறுத்தவரையில் உடனடியாக மாற்றக்கூடியதல்ல எமது பிரச்சினைகள் சுமார் 200 ஆண்டுகள் கொண்டவை. ஆகவே அதனை உடனடியாக தீர்த்து விட முடியாது.அது வீடமைப்பு பிரச்சினையாக இருக்கலாம்.காணிப்பிரச்சினையாக இருக்கலாம் தொழில் பிரச்சினையாக இருக்கலாம்.ஆகவே 200 வருட பிரச்சினைகளை நான்கு ஆண்டுகளில் தீர்க்க முடியாது குறைந்தது 10 ஆண்டுகளாவுது தேவைப்படும். ஆகவே இந்த காலப்பகுதியில் பிரச்சினையினை தீர்ப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.எதிர்காலத்தில் சகல பிரச்சினைகளுக்கும் நல்ல ஒரு தீர்விகை பெற்றுக்கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
