தொண்டமானின் முதலாவது சிரார்த்த தினத்தன்று மலையகத்தில் தேசிய பல்கலைகழகம் அமையும். நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளர் கணபதி கணகராஜ் தெரிவிப்பு. (வீடியோ இணைப்பு)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் முதலாவது சிரார்த்த தினத்தன்று மலையகத்தில் தேசிய பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பொது பெரமுனவின் வேட்பாளர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இரம்பொடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்..
கடந்த காலங்களில்; பட்டம் இருக்கா உயர்தரம் இருக்கா பட்டபின் பட்டம் என்றெல்லாம். கேட்டுவிட்டு; தான் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போதுள்ள கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு முடிவெடுத்தார.; க.பொ.த சாதாரணம் தரம் பூர்த்தி செய்யாத ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களை கவனிப்பதற்கே ஆளில்லை. அவர்கள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முக பரீட்சைகள் நிறைவு செய்யப்பட்டு நியமனம் வழங்க தயார் நிலையில் உள்ளன.
கடந்த அரசாஙத்திலும் வேலை வாய்ப்பு வழங்கினார்கள். குருகணாகல் பகுதியில் தேங்காய் பறிப்பவர்களை இங்கே கொண்டு வந்து பாடசாலைகளில் உதவியாளர்களாகவும் காவலாளியாகவும், வேலைகளை பெற்றுக்கொடுத்தார்கள.; நம்ம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்;கு எவருக்கும் இதன் போது வேலை கிடைக்கவில்லை.எமது பிரதேசத்தில் கல்வி ராஜங்க அமைச்சர் இருந்தும் கூட எம்மவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் இன்று மலையகத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானோர் நேர்முக பரீட்சைக்கு சென்று வந்துள்ளார்கள். இது தேர்தல் காலம் என்பதனால் வேலை வாய்ப்பினை வழங்க முடியாது ஆனால் தேர்தல் முடிந்தவுடன் இவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்;.
