http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலேயே தோட்டங்கள் பாரிய அபிவிருத்தி கண்டது. நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இ.தொ.க நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)

கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் தான் இந்த நாட்டில் 10 வருடத்தி;ற்கு ஜனாதிபதி அது உங்களுக்கு தெரியும் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருக்கும் காலகட்டத்தில் தான் பெருந்தோட்டங்களுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்தோம்.ஆசிரியர் நியமனங்கள்,தொடர்பாடல் நியமனங்கள், அதே மாதிரி நிறைய அரச நியமனங்கள் கொடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்;சியில் அது மட்டுமல்லாமல் ஐம்பது அறுபது காபட் வீதிகள் போடப்பட்டுள்ளன.என நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நோர்வூட் எலிபடை பகுதியில் இன்று (07) திகதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை பொறுத்த வரையிலும் சரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பொறுத்தவரையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸூக்கும் சரி நெருக்கமான உறவு இருக்கிறது. இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் மலையகத்தில் நாம் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.மறைந்த தலைவர் தொண்டமான் அவர்களின் எதிர்ப்பார்பு இந்த சமூகம் நன்றாக வர வேண்டும்.இவர்களுக்கு தேவையான வற்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்து கொடுக்க வேண்டும். என்று தான் கடைசியன்று கூட பிரதமருடன் பேசிவிட்டு சென்றார்.ஆகவே அவர் கொடுத்த அந்த வாக்குறுதியினை நாங்கள் நிச்சயமாக எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்.

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது மொட்டு சின்னத்தினை வெற்றிபெற செய்ய வேண்டும்.தேர்தல் காலங்களில் நிறைய பேர் வருவார்கள் உங்களை நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்ட உடன் சிலர் அவர்கள் பின்னால் சென்று விடுவார்கள.; ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் இந்த பக்கம் கூட வர மாட்டார்கள்.ஊரும் தெரியாது இந்த தோட்டத்தில் ஒரு பிரச்சினை என்றால் கணபதி கணகராஜ் தான் ஓடி வருவார.; ஆகவே அவருக்கு என்ன தேவையோ அதனை செய்து கொடுக்க வேண்டிய கடமையிருக்கிறது. தேர்தல் காலத்தில் யார் வந்தாலும் வரவேற்றுக்கொள்ளுங்கள் ஆனால் நீங்கள் அளிக்க வேண்டிய வாக்கு மொட்டு சின்னத்திற்கும் எங்களுக்கும் தான்.
மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கும் போது இந்திய வீடமைப்பு திட்டத்தினூடாக 300 வீடுகளை இந்த எலிபொட தோட்டத்திற்கு கொடுத்திருந்தார்.ஆட்சி மாற்றம் காரணமாக செய்ய முடியாமல் போய்விட்டது. அவருடை எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு தோட்டத்திலும் 10 இருபது வீடுகள் கட்டுவதல்ல இந்த தோட்டத்தில் உள்ள அனைவருக்கு தொழிற்சங்கம் கட்சி பார்க்காமல் அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுத்து ஒரு கிராமமாக மாற்ற வேண்டும் அதில் சகல வசதிகளும் இருக்க வேண்டும் லயங்கள் இருக்கக்கூடாது.என்பதுதான் ஆகவே இந்த ஜனதிபதியின் ஆட்சி காலத்தில் அவருடைய கனவு நனவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *