81 வயது பாட்டியின் அசத்தல் புஷ் அப்ஸ்
பிட்னஸ் மீது அதிக அக்கறை செலுத்தும் மிலிந்த் சோமன் , தனது மனைவியுடன் வெளியில் ஜாக்கிங் செல்வது, ரன்னிங் செல்வது உள்ளிட்ட பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய அம்மா புஷ் அப்ஸ் எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இது பற்றி அந்த பதிவில் மிலிந்த் சோமன் குறிப்பிட்டு இருப்பதாவது..
“ஜூலை 3, 2020. 81 சிறப்பான வருடங்களை கடந்ததை லாக் டவுனில் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். 15 தண்டால் மற்றும் அங்கிதா பேக் செய்த வெனிலா கேக் உடன் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடுகிறோம்” என மிலிந்த் சோமன் குறிப்பிட்டுள்ளார்.
