http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தலைமறைவாகியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

போதை ஒழிப்பு பிரிவில் போதை பொருள் வர்த்தகம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சமன் வசந்த குமார என்பவர் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் வெலிவேரி கிரிகித்த பகுதியில் வசிப்பிடமாக கொண்ட நபர் போதை கடத்தல் சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இவர் தலைமறைவாகியிருந்தார.; இதனால் இவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியினை நாடி புகைப்படம் ஒன்றினையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையிலேயே இவர் பொலிஸ்ஸில் சரணடைந்துள்ளார்.
இதே வேளை இந்த போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்படையதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டு நாளை தினம் வரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *