http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சிறை கைதி ஓருவருக்கு கொரோனா கைதிகள் பலருக்கு ஏறபட்டிருக்கலாம் என அச்சம்.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதார துறைபணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்;.
இவ்வாறு கொரொனா தொற்றுக்குள்ளானவர் கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு கடந்த 27 திகதி மாற்றப்பட்ட நபருக்கே கொரோனா தொற்று பரவியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கைதியுடன் நெருங்கி பழகியவர்கள் பி.சிஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த சிறைச்சாலையில் மேலும் பலருக்கு இத்தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதனால் இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரத்தினையும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *